இந்தோனேஷியாவில் 10-வது உலக தண்ணீர் மாநாடு – திமுக எம்.பி. கனிமொழி சோமு பங்கேற்பு!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 10-வது உலக தண்ணீர் மாநாட்டில்,  திமுக எம்.பி. கனிமொழி சோமு கலந்து கொண்டுள்ளார்.  1997 முதல்,  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக தண்ணீர் மாநாடு நடத்தப்படுகிறது.  அந்த வகையில்,  இந்தோனேசியாவின்…

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 10-வது உலக தண்ணீர் மாநாட்டில்,  திமுக எம்.பி. கனிமொழி சோமு கலந்து கொண்டுள்ளார். 

1997 முதல்,  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக தண்ணீர் மாநாடு நடத்தப்படுகிறது.  அந்த வகையில்,  இந்தோனேசியாவின் பாலி நகரில் 10-வது உலக தண்ணீர் மாநாடு மே 18 முதல் 24 வரை நடைபெறுகிறது.  இந்த மாநாடு நீர் பாதுகாப்பு,  சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரழிவுகளைத் தணித்தல் ஆகிய 4  தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.

தொடர்ந்து,  இந்த மாநாட்டில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ  தொடக்க உரையாற்றினார்.  மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த,  தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  அந்த வகையில் இந்தியாவின் சார்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சோமுவும் கலந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“இந்தோனேஷியாவின் பாலியில் உலக தண்ணீர் கூட்டமைப்பின் 10 வது மாநாடு “Water for shared prosperity” என்ற பொருளில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.  மாநிலங்களவை உறுப்பினராக இந்தியாவின் பிரதிநிதியாக இதில் பங்கேற்றேன்.

நீர் பாதுகாப்பு,  நீர் மேலாண்மை,  சுகாதாரமான குடிநீரின் தேவை,  சூழலியல் பாதுகாப்பு, பகிரப்பட்ட நீர் ஆதாரங்களினால் அமைதியான பங்களிப்பு மற்றும் அரசியல் முன்னெடுப்புகள் என அனைத்தும் குறித்து ஆரோக்கியமாகவும், தொலைநோக்கு பார்வையோடும் அதில் விவாதிக்கப்பட்டது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://x.com/DrKanimozhiSomu/status/1792777641633644660?t=MQylaomwab3LRNiL1PPJnw&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.