முக்கியச் செய்திகள் தமிழகம்

1 கோடி கொரோனா தடுப்பூசி; மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை

ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு இதுவரை 3 கோடியே 31 லட்சத்து 84 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக நாளொன்று 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தற்போது, 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி 18 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபானங்களை திருடிய மர்ம கும்பல்!

Gayathri Venkatesan

கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!

Gayathri Venkatesan

தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

எல்.ரேணுகாதேவி