1 மணி நேரத்தில் 1.76 லட்சம் முன்பதிவு… மஹிந்திரா #TharROXX புதிய சாதனை!

மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய தார் ராக்ஸ ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல், முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 1.76 லட்சம் புக்கிங்குகளைப் பெற்றுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா கடந்த ஆக.15ஆம் தேதியன்று…

1.76 lakh bookings in 60 minutes... Mahindra #TharROXX new record!

மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய தார் ராக்ஸ ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல், முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 1.76 லட்சம் புக்கிங்குகளைப் பெற்றுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா கடந்த ஆக.15ஆம் தேதியன்று 5 கதவுகள் கொண்ட, தார் ராக்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இதற்கான முன்பதிவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 1,76,218 புக்கிங்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 30 நிமிடங்களில் 1 லட்சம் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்ட Scorpio N இன் முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது. 

5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் ராக்ஸ் MX1, MX3, MX5, AX3L, AX5L மற்றும் AX7L என 6 வகைகளில் கிடைக்கிறது. மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். இந்த காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி கார், ரியர் வீல் டிரைவ் எனப்படும் ஆர்டபிள்யூடி (Rear Wheel Drive RWD) மற்றும் 4×4 வெர்ஷன்களில் கிடைக்கிறது. அடிக்கடி ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, மஹிந்திரா தார் ராக்ஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

தற்போது புக்கிங் தொடங்கியிருக்கும் நிலையில் வரும் தசராவில் இருந்து டெலிவிரி தொடங்கும். தார் 3-டோர் மற்றும் Roxx ஆகிய இரண்டு மாடலையும் மாதத்திற்கு 9,500 முதல் 10,000 யூனிட்கள் மட்டுமே தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. குறைவான தயாரிப்பைப் பார்க்கும் போது, இந்த தார் ராக்ஸ் மாடலுக்கான காத்திருப்புக் காலம் தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தார் ரோக்ஸ் 4X4 மாடல்களை வாங்குபவர்களுக்கு, குறிப்பாக அடர் மோச்சா பிரவுன் இன்டீரியர் ஷேடைத் தேர்வு செய்பவர்கள், தங்கள் வாகனத்தைப் பெற குறைந்தபட்சம் அடுத்தாண்டு ஜனவரி இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஆரம்ப விலை 12.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.