சேலம் ஆயுதப்படை மைதானத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம்விடப்பட்டதில் யமஹா நிறுவனத்தின் ஆர்எஸ் 100 மாடல் வாகனம் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
சேலம் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. அப்போது, 1995ஆம் ஆண்டு வெளியான யமஹா நிறுவனத்தில் ஆர்எஸ் 100 மாடல் வாகனத்தை வாங்க அனைவரும் ஆர்வம் காட்டினர்.

4 ஆயிரம் ரூபாயில் தொடங்கப்பட்ட ஏலத்தொகை படிப்படியாக உயர்ந்து 35 ஆயிரம் ரூபாய்க்கு ராஜா என்பவர் ஏலத்தில் எடுத்தார். மேலும் இந்த இருசக்கர வாகனத்தில் வரும் ஒலி தனித்துவமானது என்பதாலே இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் காணப்படுகிறது.







