ரஜினியுடன் நடிக்க சான்ஸ் கொடுத்தால் இணைந்து நடிக்கலாம்; ரஜினியுடன் கூட்டணி குறித்து இப்போது கூறமுடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பின் செய்தியாளர்களை சந்தித்த போது, புதிதாக கட்சி தொடங்கியுள்ள ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளேன் என்றார்.
ரஜினியோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு
’நான் அவரோடு சேர்ந்து திரைப்படத்தில் நடிக்க வேண்டுமானால் வாய்ப்பு உண்டு’ என தெரிவித்தார்.
மிக விரைவில் சட்டமன்றத் தேர்தலில் எனது பங்களிப்பு உண்டு என சொன்னீர்கள் அதைப் பற்றி உங்களது கருத்து?
நிச்சயமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்றார்.
திமுகவுக்கு எதிராக வாக்களிப்பீர்களா?
தெரியவில்லை ஆனால் தேர்தலில் வாக்களிப்பேன்.
உங்களது ஆலோசனை கூட்டம் எந்த கட்டத்தில் உள்ளது?
ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்







