பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். இயக்குநனர் பகவதி பாலா இயக்கிய ஆதிக்க வர்க்கம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த…

பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இயக்குநனர் பகவதி பாலா இயக்கிய ஆதிக்க வர்க்கம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளில் இருக்கைகளை அதிகரிக்க கோரி எழுத்துபூர்வமாக கோரிக்கை வைத்தால், இருக்கைகளை அதிகரிக்க அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, பொங்கள் பரிசு மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் பொங்கல் பரிசை விமர்சிப்பவர்கள் தமிழினத் தூரோகிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply