திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசின் நில மதிப்பீட்டை பூஜ்ஜியமாக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலங்களை பத்திரப்பதிவு ஆவணங்களில் பூஜ்ஜிய மதிப்பீட்டின் கீழ் கொண்டு வரும் பணியில் இந்துசமய அறநிலையத்துறையும், வக்புவாரியமும் ஈடுபட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர்.அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் டிஎஸ்பி தனராஜ் தலைமையிலான போலீசார் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
—-வேந்தன்







