சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 3 மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜாவிற்கு, மூன்று மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே…

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜாவிற்கு, மூன்று மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த மீன்வியாபரி நாகூரானின் 7 வயது மூத்த மகள், கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சிறுமி திடீரென்று மாயமாகியதைடுத்து, தொடர்ந்து அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடிய பெற்றோர், மகள் கிடைக்காததால், ஏம்பல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அப்பகுதி குளத்தின் அருகே சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணையில், அதேபகுதியில் பூக்கடை வைத்துள்ள ராஜா என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டின் வாசலில் நின்றிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவரை, போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மருத்தவ பரிசோதனைக்காக அழைத்து சென்ற போது, தப்பிசென்ற ராஜாவை, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். இதுகுறித்து கும்பகோணம் மகிளா நீதமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், ராஜாவை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கு மூன்று மரண தண்டனையை வழங்கி அதிரடி தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply