கள்ளக்குறிச்சி அருகே கணவன் இறந்த சோகத்தில் மனைவி, மகள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்-உதயமாம்பட்டு ரோடு பகுதியில் வசித்து வந்த பாலமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக 3 மாதத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். பாலமுருகன் மனைவி லலிதா, அவரது மகள் தர்ஷினி இருவரும் தியாகதுருகத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் துணைக்கு லலிதாவின் தந்தை தங்கியிருந்தார்.
இந்நிலையில், லலிதா, தர்ஷினி இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







