மண்டைக்காடு அருகே புதூர் கடற்கரையில் புனித நீராட சென்ற 5 பேரை கடல் அலை இழுத்து சென்ற நிலையில் மீனவர்கள் விரைந்து மீட்டு நாகர்கோவில் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும்
நிலையில் இன்று அம்மாண்டி விளை அருகே பொட்டல் பகுதியை சேர்ந்த வைகுண்ட மணி (57) இவரது மனைவி சீமா (54), விஜயா(45), ஆஷா (20), ஆர்ஷிகா(18) ஆகியோர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் மேற்கொண்ட நிலையில் புதூர் கடற்கரைக்கு புனித நீராட சென்றுள்ளனர்.
அப்போது திடீரென எழுந்த ராட்ச அலையில் இழுத்து செல்லப்பட்டு செய்வதறியாமல் திகைத்து தொடர்ந்து கூச்சல் போட்டுள்ளனர்.அருகிலிருந்த மீனவர்கள் சத்தம் கேட்ட நிலையில் விரைந்து மீட்டு பாதிக்கப்பட்டவர்களை நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்த பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







