தளபதி 68 படம் குறித்து இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. இன்னும் லியோ படமே ரிலீஸ் ஆகாத நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. முதலில் இந்த படத்தை அட்லீ இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த பட்டியலில், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜின் பெயரும் அடிபட்டது.
Next… pic.twitter.com/iw1M5Dy7x9
— Vijay (@actorvijay) May 21, 2023
இந்நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.
பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்யாசமாகவே இருக்கும். சென்னை 28 படத்தில் துவங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதேனும் வித்யாசமான விஷயங்களை வெங்கட் பிரபு முயற்சித்து வருகின்றார். அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் இப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது தளபதி 68 படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அடுத்த பாடலுக்கு அனிருத்துடன் இணைந்து பணிபுரியவுள்ளதை யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Sir, namma paattum irukku… Can't wait to put out 😊 https://t.co/l4WDQr3mTw
— Raja yuvan (@thisisysr) August 2, 2023
அதோடு மட்டுமல்லாமல், சந்தோஷ் நாராயணனின் பதிவை மறுபதிவு செய்த யுவன் ஷங்கர் ராஜா, சார், நம்ம பாடலும் இருக்கு. அதற்காக காத்திருக்க முடியவில்லை என
பதிலளித்திருந்தார். அதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், சார். நீங்கள் அன்பானவர். யுவன் சங்கர் ராஜா -அனிருத் கூட்டணிக்கே எனது ஓட்டு எனப் பதிவிட்டுள்ளார்.
Sir ! So sweet of you . My vote is always for your combo with @anirudhofficial 🤗🤗. https://t.co/CgqafDemQq
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 2, 2023
இந்த டிவிட்டர் பதிவுகள் ரசிகர்களிடம் கவனம் பெறவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







