கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. மத்திய மற்றும் வடமாவட்டங்களில்…

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. மத்திய மற்றும் வடமாவட்டங்களில் பருவ மழை கொட்டி தீர்க்கிறது. இதன் காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளரிகுண்டு மற்றும் ஓஸ்துர்க் தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.