‘#XTREME’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சின்னத்திரை நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி நடிக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6-வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்‌ஷிதா…

சின்னத்திரை நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி நடிக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6-வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி. இவர் ஹீரோயினாக நடிக்கும் படம், ‘எக்ஸ்ட்ரீம்’. மேலும் இப்படத்தில் அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ராஜ் பிரதாப் இசையமைக்கிறார். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார்.என் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ராஜவேல் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இது க்ரைம் த்ரில்லர் படமாகும். இந்த படத்தின் தொடக்க விழாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.