விரைவில் ரீ ரிலீஸ் ஆகும் படையப்பா?

படையப்பா திரைப்படத்தையும் விரைவில் ரி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது. அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  ரசிகர்கள் மத்தியிலும் அடுத்தடுத்து தங்களுக்கு…

படையப்பா திரைப்படத்தையும் விரைவில் ரி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.

அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  ரசிகர்கள் மத்தியிலும் அடுத்தடுத்து தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களில் மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது.

இதனையடுத்து பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்களை மீண்டும் டிஜிட்டல் பதிப்பில் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.  ரஜினிகாந்தின் பாபா,  கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு,  ஆளவந்தான்,  சூர்யாவின் வாரணம் ஆயிரம்,  அஜித்குமாரின் வாலி,  பில்லா, விஜயின் கில்லி என ஏராளமான திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘படையப்பா’ படம் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது.  இப்படம் 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த்,  சௌந்தர்யா,  ரம்யா கிருஷ்ணன்,  செந்தில்,  நாசர்,  ராதாரவி,  லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தில் மவுத் ஆர்கன்,  கையில் காப்பு என படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி.  இளைஞர்களுக்குப் பிடித்தது போல இருக்கவேண்டும் என்பதால் முதல் பாதியில் உடை,  ஸ்டைல் எல்லாம் அதற்கேற்றாற்போல இருக்கும்.  மேலும்,  ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றது.  அனைத்து பாடல்களும் ரசிகர்களின் நெஞ்சில் இன்றைக்கு வரை நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில்,  படையப்பா திரைப்படத்தையும் ரிலீலிஸ் செய்ய அப்படத்தின் இணை தயாரிப்பாளரான தேனப்பன் முடிவு செய்துள்ளதாகவும்,  இதற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  விரைவில் படையப்பா படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.