ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் டிரெய்லர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : தேசிய கீதத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவு… ஜன.11 வரை சட்டப்பேரவை நடைபெறும் என அறிவிப்பு!
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லரை நாளை (ஜன.7) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.








