’கூலி’ படத்தின் ரீலிஸ் தேதி இதுவா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’கூலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், கிஷோர், மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் பாங்காக் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.  தற்போது சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  படப்பிடிப்பு பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த இரண்டு வாரங்களில் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த படமானது ஆகஸ்ட் 10ம்தேதி அல்லது தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என தகவல் வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.