கேன்ஸ் திரைப்பட விழாவில் போலி இரத்தத்தை தன் மீது ஊற்றிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த முறை இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படுகின்றன.
அதன்படி அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன.
VIDEO: Cannes action.
A woman dressed in Ukrainian colours pours fake blood on herself on the steps of the Palais des Festivals during the screening of the film 'Acid', before being removed by security staff pic.twitter.com/v7hAz1zetW
— AFP News Agency (@AFP) May 22, 2023
உலகின் பல நாடுகளில் இருந்து பல முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் உக்ரேன் நாட்டு கொடி நிறங்களை கொண்ட உடயை அணிந்த பெண் ஒருவர், போலி இரத்தத்தை தன்மீது ஊற்றிக் கொண்டு தீவிர ஆர்ப்பாட்டம் செய்தார். பின்னர் அவரை பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து வெளியேற்றினர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தில், இதை அவர் செய்தாதாக கூறப்படுகிறது.








