“ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம்” – #PMModi உறுதி

ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,…

ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் இதே நாளில்தான் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கும் நமது படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு என்பது நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது மாவீரர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பங்கள் இந்த முக்கிய முயற்சியால் பயனடைந்துள்ளனர் என்பது உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது நமது ஆயுதப்படைகளின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம்.”

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.