“நாம சேர்ந்து கட்டி வச்ச காதல் மாளிகை” – வெளியானது #KadhalikkaNeramillai படத்தின் 3வது சிங்கிள்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா…

"We built a house of love together" - the 3rd single from the movie #KadhalikkaNeramillai has been released!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் கடந்த நவ.22ம் தேதி வெளியாகி வைரலானது.

https://x.com/astrokiru/status/1875522506012209384

விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ பாடி இருந்தனர். இப்படத்தின் 2வது பாடலான ‘லாவெண்டர் நேரமே’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் 3வது பாடலான ‘இட்ஸ் பிரேக் அப்டா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.