’water resistant’ என விளம்பரம் செய்த ஆப்பிள் ஐபோன் நிறுவனத்துக்கு இத்தாலியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது அப்டேட் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக water resistant எனும் அம்சத்தை ஸ்மார்ட் போன்களில் இருப்பதாக விளம்பரம் செய்கின்றன. அதாவது போன் தண்ணீரில் விழுந்தால் கூட எந்த பாதிப்பும் இருக்காது என்பதுதான். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோனில் இந்த அம்சம் இருப்பதாக வெளியிட்டிருந்தது.
ஆனால் இதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு இத்தாலியில் ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சூழலில் மட்டுமே இது செயல்படும் என அதில் தெளிவான விளக்கம் கொடுக்கப்படாததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. iPhone 8, iPhone 8 Plus, iPhone XR, iPhone XS, iPhone XS Max, iPhone 11, iPhone 11pro and iPhone 11 pro Max உள்ளிட்ட மாடல்களில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வேலை என இத்தாலியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.




