திண்டுக்கல் அருகே காலி குடங்களுடன் பொது மக்கள் சாலைமறியல்!

திண்டுக்கல் அருகே பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அருகே ராமராஜபுரம் ஊராட்சி மன்ற பகுதிக்கு உட்பட்ட ஆர். மீனாட்சிபுரம்…

திண்டுக்கல் அருகே பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகே ராமராஜபுரம் ஊராட்சி மன்ற பகுதிக்கு உட்பட்ட ஆர். மீனாட்சிபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பழனியம்மாள் பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் நிலையில் தங்கள் பகுதியான ஆர் மீனாட்சிபுரத்தில் மட்டும் குடிநீர் வழங்காமல் திட்டமிட்டு புறக்கணிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தண்ணீர் வராததை பற்றி  ஊராட்சி மன்ற தலைவரிடம்  கூறினால்  முறையான பதில் கூறவில்லை என்றும், மேலும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அடாவடித்தனமாக பேசுவதாக மக்கள் கூறி வந்தனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக   குடிநீர்  வராமல்  அப்பகுதி பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி  வந்தனர். இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரியும், ஊராட்சி மன்ற தலைவர் மீதும், அவர் கணவர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க கோரியும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் இச் சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் போரட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கபடுவதாக  வட்டாட்சியர் உறுதி அளித்தார். உறுதி அளித்ததின் பேரில்  பொதுமக்கள்  கலைந்து சென்றனர். இச் சம்பவம் அப்பகுதி பரப்பபை சற்று ஏற்படுத்தியது.

–கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.