ரசிகர்கள் நவீனை ட்ரோல் செய்ய விடாமல் தடுத்த விராட் -வைரலாகும் வீடியோ!…

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் நேருக்கு நேர் எதிர்கொண்டத்தில் என்ன நடந்தது? 2023 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில்…

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் நேருக்கு நேர் எதிர்கொண்டத்தில் என்ன நடந்தது?

2023 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் நேருக்கு நேர் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஏனெனில் ஐபிஎல் 2023ல் நடந்த சண்டைக்குப் பிறகு இருவரும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கவிருந்தனர்.

டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் நவீனை ட்ரோல் செய்து கொண்டிருந்த போது, ​​விராட் தனது உயரம் எவ்வளவு பெரியவர் என்பதை நிரூபிக்கும் ஒரு செயலை செய்தார்…. விராட்-நவீன் கட்டிப்பிடித்து அன்பை பரிமாரினர்.

ஐபிஎல் 2023 இல் RCB vs LSG இடையே நடைபெற்ற போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.  இதனால், நேற்று, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் நேருக்கு நேர் வந்தபோது, ​​என்ன நடந்தது என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்திய இன்னிங்ஸின் போது, ​​அரங்கத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் நவீனை ட்ரோல் செய்யத் தொடங்கினர். பின்னர் விராட், நவீன் உல் ஹக்கை ட்ரோல் செய்ய வேண்டாம் என்று கூட்டத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார். இது மட்டுமின்றி, போட்டியின் போது நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் போட்டியின் நடுவே கைகுலுக்கிக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.