விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர், விராட் கோலி. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் 2017ஆம் ஆண்டு இத்தாலி…

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர், விராட் கோலி. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் 2017ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திருமணம் நடைப்பெற்றது. நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த இவர்கள், விளம்பர படங்களில் ஒன்றாக நடிக்கும் போது காதலில் விழுந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. திருமணத்திற்கு பிறகு, அனுஷ்கா ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

அனுஷ்கா ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இவர்கள் வாமிகா என பெயரிட்டனர். பிறந்து சில வருடங்கள் வரை தங்களின் குழந்தையின் புகைப்படத்தை எங்குமே பதிவிடாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வரைதான் இவர்கள் தங்களின் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தனர்.

Image

இரண்டாவது குழந்தை:

அனுஷ்கா ஷர்மா, தனது கணவர் பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். இருவரும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களையும் அடிக்கடி சந்திப்பர். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுஷ்கா கேம்ராவின் கண்களில் படாமல் இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.