30.8 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

விஜயகாந்த் மறைவு – ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து,  விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது.  இன்று பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.  பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45 மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், மறைந்த விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நேற்று, விஜயகாந்த்  மறைவு குறித்து ஆளுநர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“சிறந்த நடிகரும்,  அர்ப்பணிப்புமிக்க தலைவரும்,  சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.  சினிமா,  அரசியல்,  சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவு கூரப்படும்.  எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும்,  எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading