“மிகவும் பெருமையாக உள்ளது” – மகாராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்த #Prince!

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் ரிலீசாகியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம்…

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் ரிலீசாகியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் ரூ.கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இப்படம் ஓடிடி வெளியீட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் இன்று (நவ.29) வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மகாராஜா திரைப்பட குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

“மிகவும் பெருமையாக உள்ளது. மகாராஜா திரைப்படம் சீனாவிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லைகளை கடந்து சாதிக்கும் வகையிலான படத்தை உருவாக்கிய படக்குழுவிற்கு வாழ்த்துகள்”

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.