வேங்கை வயல் வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது கட்டமாக பத்து பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்
கல்லூரியில் இரண்டாவது கட்டமாகப் புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி
பரிசோதனை இன்று எடுக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த நான்காம் தேதி எடுப்பதாக இருந்தது மருத்துவக்
கல்லூரி பேராசிரியர் மாற்றுப் பணிக்குச் சென்று விட்டதால் இன்று 10 பேருக்கு
டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு
இட்டு இருந்த நிலையில் மூன்று பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்த நிலையில்
மீதமுள்ள எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்துவிட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இதுவரை 10 நபர்களும் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை எடுத்துக் கொண்டனர்.







