தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 27 ஆம் தேதியும், டீசர் ஜூலை 28 ஆம் தேதியும் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தோழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். நடிகை சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்திற்கு வாத்தி என்று தமிழிலும் சார் என்று தெலுங்கிலும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தனுஷ் இந்தப் படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 27-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்கும், ஜூலை 28-ம் தேதி படத்தின் டீசரும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ திரைப்படத்தின் அப்டேட்ஸ் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








