பென்னிகுயிக் சிலை திறப்பு; இங்கிலாந்து செல்லும் அமைச்சர்

இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை திறக்கும் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொள்கிறார். பென்னி குயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக இங்கிலாந்தில் சிலை அமைக்கும் பணிகளை ஒருங்கிணைக்கும் சந்தான பீர் ஒளி முதலமைச்சர் ஸ்டாலினை இன்று…

இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை திறக்கும் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொள்கிறார்.

பென்னி குயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக இங்கிலாந்தில் சிலை அமைக்கும் பணிகளை ஒருங்கிணைக்கும் சந்தான பீர் ஒளி முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பென்னி குயிக்கின் சிலை அமைக்கும் பணிக்கு நிதி வழங்கியதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தான பீர் ஒளி, “முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் சிலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைக்கின்றார். இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை திறப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. சிலை திறப்பு விழாவிற்கு வருவதற்கு முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்துள்ளேன்.  முதலமைச்சர் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்”  எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.