ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சோதனைகள்…

சென்னையில் உள்ள ஜிபிஏ கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்று நேரத்தில் வருமானவரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தனது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாக…

சென்னையில் உள்ள ஜிபிஏ கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்று நேரத்தில் வருமானவரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தனது
எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாக பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி
அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளை கவனிப்பதாகக் கூறப்படும் ஆடிட்டரின் நிறுவனமான சென்னை மைலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ கன்சல்டென்சி அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையின் ஒரு கட்டமாக  ஜி பி ஏ
கன்சல்டன்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் செய்யாதுரை வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக
வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனைக்காக அதே அலுவலகத்திற்கு வந்தனர்.

ஒரே நேரத்தில் வருமானவரித்துறை, மற்றும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜி பி ஏ கன்சல்டன்சி அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனைகள் மூலம் செய்யாதுரையின் நிறுவனங்களுக்கும், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் இந்த ஜிபிஏ கன்சல்டன்சி நிறுவனம்தான் கணக்கு வழக்குகளை கவனித்து வருவது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.