சென்னை ஐஐடியில் பி.டெக் படிப்பில் கால அளவு மாற்றம்!

சென்னை ஐஐடில் பி.டெக். பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு,  பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கையில்…

சென்னை ஐஐடில் பி.டெக். பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு,  பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னை ஐஐடி மாணவா்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத் திட்டத்தின் தேவை, நெகிழ்வுத் தன்மையின் அடிப்படையில் இந்தியாவுக்கான பி.டெக். பாடத் திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாணவா்கள் தங்கள் விருப்பப் பாடத் திட்டங்களில் இருந்து முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவா்.

வேலைவாய்ப்பு,  ஆராய்ச்சி,  கண்டுபிடிப்பு,  தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் பாடத் திட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளைத் தொடா்ந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  பி.டெக். படிப்பின் 2ம் ஆண்டிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெகிழ்வுத் தன்மை,  இடைநிலைக் கற்றல் அதிகரிப்பு,  செயல்திட்டங்கள்,  தொழில்முனைவோா் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் கல்வி அமைப்பை இந்தக் கல்வி நிறுவனம் புதுப்பித்துள்ளது.

முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் அளித்த விரிவான கருத்துகளுக்குப் பின் பி.டெக். பாடநெறி கால அளவு சீரமைக்கப்பட்டு,  பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436 மணிநேரத்தில் இருந்து 400 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.  தொழில்முறை மற்றும் தொழில் முனைவு சாத்தியக்கூறுகளை மாணவா்கள் ஆராய்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.