முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’ஜி.பி.முத்து பிக்பாஸ்-க்கு போறாராம்லா..’: காமெடி நடிகர் அட்வைஸ்

பிரபல டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதை உறுதி செய்திருப்பதை அடுத்து காமெடி நடிகர் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

பிரபல டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து. சமூக வலைதளங்களில் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதை ஜி.பி.முத்து உறுதிப்படுத்தியுள்ளார். இதற்காக பிக்பாஸ் வீட்டின் முன் நின்றபடி அவர் எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸில் பங்கேற்கும் ஜி.பி.முத்துவின் செய்தியை, ட்விட்டரில் டேக் செய்துள்ள நகைச்சுவை நடிகர் சதீஷ், ’பிக்பாஸ் வீட்டின் உள்ளே டாஸ்க் லெட்டரை மட்டும் படிக்க விட்டுராதீங்கப்பா. என்னடா டாஸ்க் கொடுக்கீறீங்க.. செத்த பயலுவோலா.. நாறப்பயலு வோலா…’ என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சசிகலா வழக்கில் அதிரடி உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்

Saravana Kumar

நேபாள நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.ஷர்மா அரசு தோல்வி!

Halley karthi

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

Saravana Kumar