30.8 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

“ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஒரு CG காட்சி கூட இல்லை” – இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்!

ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஒரே ஒரு CG காட்சி கூட இல்லை” என படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.

சினிமா உலகின் மந்திரகாரன் என்று புகழப்படும் நோலன் படத்தின் சிறு அப்டேட்டும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Following படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நோலன், தொடர்ந்து வெளியான தனது படங்கள் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். இயற்பியல் விதிகளில் தொடங்கி விண்வெளியின் கருந்துளை வரை தனது படங்கள் வாயிலாக இயற்பியல் வகுப்பெடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பஞ்சாங்கத்தைக் கொண்டு ராக்கெட் விட்டதாக சில சினிமா பிரபலங்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், விண்வெளி சார்ந்த தனது படத்திற்கு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களை உடன் வைத்து திரைக்கதை அமைத்து நம்மையும் விண்வெளிக்கே அழைத்து சென்றவர். இவர் இயக்கத்தில் வெளியான இன்டெர்ஸ்டெல்லர் விண்வெளி சார்ந்த படங்களில் காலத்தால் அழியாதது.

மேஜிக்கை வைத்து மேஜிக் செய்து (The Prestige ), கனவுக்குள் கனவு என மாய வித்தை நிகழ்த்தியது (INCEPTION ) என திரையில் வித்தைகள் நிகழ்த்தியவர். தற்போது இரண்டாம் உலகப் போரின்போது அணுக்குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரைப் பற்றி படமெடுத்து வருகிறார். இதற்கு முன்பாக வெளியான இவரது படமான டெனெட் படத்தில், காட்சிகளைத் தத்ரூபமாகக் கொண்டுவரும் நோக்கில் அசலான விமானத்தை வெடிக்கச் செய்து அதை காட்சிப்படுத்தி சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம்  ஜூலை 21-ம் தேதி  வெளியாகவுள்ளது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

அணுகுண்டு சார்ந்த இந்த படத்தில் அணுகுண்டு வெடிப்பு பற்றிய காட்சிகளெல்லாம் உண்மையாகவே அணுகுண்டை வெடிக்கச்செய்து படமாக்கியுள்ளார் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிப்படுத்தும் விதமாக “இந்த ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஒரே ஒரு CG காட்சி கூட இல்லை” என நோலனே தெரிவித்துள்ளார்.

ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கியிருக்கும் கிறிஸ்டோபர் நோலன் நிகழ்த்த இருக்கும் மாயாஜாலத்தை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஓப்பன்ஹெய்மரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்துவரும் சூழலில் இந்தப் படம் அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading