சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலின் ஆறாவது பெட்டியில் புகை வந்ததால், பல்லாவரம் ரயில் நிலையத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டது.
அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தில், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி வந்த மற்றொரு ரயில் திருப்பிவிடப்பட்டதால் இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பதட்டமடைந்தனர்.
இதனால் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பால் காலை முதல் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.







