தேனி: வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர் -பொதுமக்கள் பாராட்டு…

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்த பாம்புபிடி வீரரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். கோடாங்கிபட்டி பகுதியில் சாந்தி என்பவர் வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட அவரது…

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்த பாம்புபிடி வீரரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கோடாங்கிபட்டி பகுதியில் சாந்தி என்பவர் வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட அவரது இரு மகள்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்புபிடி வீரர் கண்ணன், வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்புவை லாவகமாக பிடித்தார். பின்னர் வனத்துறையினரிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.