தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ் . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜோ’. காதல் கதையான இப்படம் மக்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்வைனீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார். இதில் ரியோ உடன் கோபிகா ரமேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, துளசி சிவாமணி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை யுவனின் ஒய்எஸ்ஆர் (YSR) நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் நகைச்சுவையான காதல் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.







