பாரதிராஜா, சதுரங்க வேட்டை பட புகழ் நட்டி, ரியோராஜ், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநரான பிரிட்டோ ஜேபி இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, சதுரங்க வேட்டை பட புகழ் நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘நிறம் மாறும் உலகில்’. இப்படத்தில் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
இப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன் மற்றும் ஜி.எஸ்.சினிமா இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்க்கில் பல திகில் குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றங்களுடனும் பார்த்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தையும் உணர்வுகளை பேசும் விதமாகவும் கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநரான பிரிட்டோ.
நான்கு கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது. மும்பையில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங்க் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/beemji/status/1781668603588116633
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தள்ளாத வயதிலும் பாரதிராஜா இப்படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெரிகிறது.







