பிருத்விராஜின் “ஆடுஜீவிதம்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் ,  அமலாபால் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள  ‘ஆடுஜீவிதம்’  திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கும்  ‘ஆடு ஜூவிதம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. …

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் ,  அமலாபால் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள  ‘ஆடுஜீவிதம்’  திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கும்  ‘ஆடு ஜூவிதம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த படம் மலையாள எழுத்தாளர் பென்யாமினின்  சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது .

சவுதி அரேபியாவிற்கு புலம்பெயர் தொழிலாளியாக வந்த நஜீப் முகம்மது என்ற இளைஞர் பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்கும் பணியில் சிக்கிக் கொள்கிறார்.  அங்கு அவர் பல்வேறு கஷ்டங்கள் இன்னல்களுக்கு மத்தியில் வேலை பார்க்கிறார்.

சவூதி பாலைவனத்தின் ஆடு மேய்க்கும்  பணியில் அடிமையாக சிக்கிக் கொள்ளும் அவருக்கு பணம் சம்பாதித்து சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்கிற அவரது கனவு தகர்த்தெரியப்படுகிறது.  அரேபியாவின் வெப்பமான பாலைவனங்களில் இருந்து நஜீப் தப்பித்து இந்தியா திரும்பினாரா? இல்லையா? என்பதே படத்தின் கரு.

ப்ளஸ்ஸி இயக்கும் இப்படத்தில் பிருத்விராஜூடன்,  அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஏ.ஆர். ரஹ்மான இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.  சுனில் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைத்துள்ளார்.  ஆடுஜீவிதம் படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.