‘தக் லைஃப்’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘தக் லைஃப்’ படக்குழு. உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர் , இயக்குநர் , பாடகர் , நடனக்கலைஞர்…

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘தக் லைஃப்’ படக்குழு.

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர் , இயக்குநர் , பாடகர் , நடனக்கலைஞர் , சண்டைப் பயிற்சியாளர் , என தனது 5 வயதில் இருந்து திரையுலகிற்கு பங்களித்து வரும் பெரும் கலைஞன். எத்தனையோ நடிகர்கள் புகழின் உச்சத்திற்கு சென்று பின் அடையாளம் தெரியாமல் மறைந்துபோகும் சினிமாவில் இன்றும் திரையுலகம் வியக்கும் ஒரு கலைஞனாக தன்னை தக்கவைத்துள்ளார். அந்த கலைஞனின் பிறந்தநாளை இன்று உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துள்ள தக் லைஃப் படத்தின் அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது. தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு சின்ன டீசராக படக்குழு வெளியிட இருக்கிறது. இதற்கு முன்னதாக தக் லைஃப் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கமல் மற்றும் சிம்புவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘தக் லைஃப்’ படக்குழு. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.