இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இதையும் படியுங்கள்: படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் கார்த்தி செல்ஃபி!
கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஜன.25-ம் தேதி வெளியானது.
இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதுடன், வசூலிலும் கலக்கி வருகிறது. நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனுவின் நடிப்பும் பெரிதும் ரசிக்கும் படியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியது.
இதில் இயக்குநர் பா.ரஞ்சித், ஜெயக்குமார், துணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படம் வெளியான 4 நாள்களில் இந்திய அளவில் ரூ. 4.40 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/officialneelam/status/1751997961998098783









