விஜய் நடிக்கும் ‘தி கோட்’ – ரசிகர்களுக்கு புது அப்டேட் கொடுத்த படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கோட்’ படத்தின் 3-வது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் …

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கோட்’ படத்தின் 3-வது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (G.O.A.T. – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் 3வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணிக்கு 3வது பாடலின் புரோமோ வெளியாகும் எனவும், நாளை மாலை 6 மணிக்கு பாடல் வெளியாகும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.