கோலாகலமாக நடைபெற்ற 11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு விழா! காணொலி வாயிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!!

11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் காணொலி வாயிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.  11-வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில்…

11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் காணொலி வாயிலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். 

11-வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள்  அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்னர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். ரூ.25 கோடி செலவில் நடைபெறும் இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மலேசியாவில் நடைபெற்றது.

இந்நிலையில்,  11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு விழா கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. மலேசியா நாட்டின் அமைச்சர் சிவகுமார், துணை அமைச்சர் சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் சரவணன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் டான் ஶ்ரீ மாரிமுத்து, செயலாளர் நந்தன் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி வாயிலாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பாக 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். உலகின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. தமிழ் மொழி காப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியது திமுக.வாழ்க தமிழ், வளர்க தமிழர் ஒற்றுமை. என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.