கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர்

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெட்ரோ இரயில் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு பல்வேறு சாலைகளை இணைக்கும்…

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெட்ரோ இரயில் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு பல்வேறு சாலைகளை இணைக்கும் கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், 5.38 இலட்சம் சதுர அடி பரப்பளவு இடம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிஎம்டிஏ நிதியுதவியுடன் கடந்த 2018ம் ஆண்டு ரூ.14.50 கோடி செலவில் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

புல் தரையை சுற்றி அலங்கார விளக்குகள், தமிழ் எழுத்துக்கள் நிறுவப்பட்டுள்ளன. 50 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, 56 கடைகள் உள்ளது. நகர்ப்புற சதுக்கம் முழுவதும் 27 வகையான 7,069 செடிகள் நடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.