வெளியானது ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் 2வது சிங்கிள்!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இடம்பெற்றுள்ள 2வது பாடலான “தேடியே போறேன்” பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர், …

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இடம்பெற்றுள்ள 2வது பாடலான “தேடியே போறேன்” பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

இதனையடுத்து,  விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ்,  டாலி தனஞ்சயா,  முரளி ஷர்மா,  மேகா ஆகாஷ்,  தலைவாசல் விஜய்,  சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசை அமைக்க,  அச்சு ராஜாமணி பின்னணி இசையை பார்த்துள்ளார்.

இப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்.  இத்திரைப்படத்தின் முதல் பாடலான `தீரா மழை’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், 2வது பாடலான “தேடியே போறேன்” பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை இசையமைப்பாளர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.