ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த #SDT18 படக்குழு!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘SDT18’ படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.…

"Thanks for waiting and understanding... New release date will be announced soon" - #KanganaRanaut

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘SDT18’ படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பின்னர் இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களின் மூலம் இவர் கவனம் பெற்றார்.

மேலும் இவர் தெலுங்கிலும் பணியாற்றி வருகிறார். இவர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆப் கொத்தா’ திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில், ஐஸ்வர்யா லட்சுமியின் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘SDT18’ என்ற தெலுங்குப் படத்தின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி வசந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.