#ThangalaanSuccessMeet தடபுடலாக விருந்து வைத்த ‘சீயான்’ விக்ரம்!

தங்கலான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் விக்ரம் படக்குழுவிற்கு தடபுடலாக விருந்து வைத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த…

தங்கலான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் விக்ரம் படக்குழுவிற்கு தடபுடலாக விருந்து வைத்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று கூறப்படும் நிலையில் நேற்று வரை இத்திரைப்படம் தற்போது வரை 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கலான் திரைப்படம் 19-ம் நூற்றாண்டில், கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்க அழைத்துச் செல்லப்படும் தமிழக மக்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் படத்தின் கதை, இயக்கம், நடிகர்களின் அற்புதமான நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அதேபோல் சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்துகொண்டு இருக்கின்றது. இருப்பினும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/C_LX33Nx3e2/?utm_source=ig_web_button_share_sheet

இந்த நிலையில் தங்கலான் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் தங்கலான் படத்தில் இடம்பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நடிகர் விக்ரம் தடபுடலாக விருந்து வைத்தார். மேலும் அவரே சாப்பாட்டை பரிமாறும்  படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.