தை திருவிழா | ஜெகன்நாத பெருமாள் கோயில் வீதி உலா கோலாகலம்!

தை திருவிழாவை முன்னிட்டு ஜெகன்நாத பெருமாள் கோயில் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பிரசித்தி பெற்ற செண்பகராமநல்லூர் ஜெகன்நாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். இங்கு தை மாத திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதையும் படியுங்கள் : #Sudan | தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்… இந்தியர் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

இதனைத் தொடர்ந்து, ஜெகன்நாத பெருமாள் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள்
நடைபெற்று வருகின்றன. இரவில் பெருமாள் தாயார் உடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

திருவிழாவின் 10வது நாளான நேற்று பக்தர்கள் பஜனை பாடல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பங்கேற்ற கும்மி ஆட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து ஜெகன்நாத பெருமாள் செண்பகவல்லி தாயார் மற்றும் பூமாதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி
தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.