‘அயலான்’ படத்தின் டீசரை விரைவில் வெளியிடப் போகிறோம் என படத்தை வெளியிடும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அயலான் திரைப்படத்தில் வரும், ஏலியன் கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அயலான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுஅறிவித்தது.
This Diwali, get ready for more than just fireworks in theatres 🧨#Ayalaan 👽🛸 Teaser En route to Earth 🌍
— KJR Studios (@kjr_studios) May 27, 2023
இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகிய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வீடியோ, படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே ‘அயலான்’ படத்தின் டீசரை விரைவில் வெளியிடப் போகிறோம் என படத்தை வெளியிடும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.








