9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு – தமிழ் ஆசிரியர் கைது

சிவகங்கை அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு உதவி…

சிவகங்கை அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ வாய் பேச முடியாத செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

 

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகள் வட்டாட்சியர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆல்பர்ட் ஆபிரகாம் என்பவர் தான் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் முன்னாள் மாணவிகள் 5 பேருக்கும் ஆல்பர்ட் ஆபிரகாம் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்ததுள்ளது.


ஆனால், பயத்தின் காரணமாக அந்த மாணவிகள் புகார் கொடுக்காததால், தமிழ் ஆசிரியரின் அம்பலம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இதையடுத்து, மானாமதுரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆல்பர்ட் ஆபிரகாமை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.