டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து நேற்று அறிவித்தது.  இந்த நிலையில்,  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இதற்காக, அகமதாபாத்தில் நடக்கும் கூட்டத்தில் காணொலி மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா பங்கேற்க உள்ளார். அந்த ஆலோசனைக்குப் பின் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுகிறது.  மேலும், அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் ஐசிசி வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.