#Surya45 – உறுதியாகிறதா சூர்யா – ஆர்ஜே பாலாஜி கூட்டணி?

சூர்யாவின் 45-வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்ஜே பாலாஜி ஒரு பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்…

#Surya45 - Sure Surya - RJ Balaji alliance?

சூர்யாவின் 45-வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆர்ஜே பாலாஜி ஒரு பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா? இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படத்திற்கு எஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டணியை உறுதிசெய்யும் விதமாக ஆர்ஜே பாலாஜி ஒரு பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் ஆயுத எழுத்து படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, ‘ஜன கன மன’ பாடலுடன் ஆர். ஜே. பாலாஜி தன் குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2 மணிநேரத்திற்கு முன்பு பகிரப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வரை 50 ஆயிரம் விருப்பங்களை பெற்றுள்ளது. இது கண்டிப்பாக #Surya45 படக்குழுதான் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இந்தக் கூட்டணி இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. தற்போது, திரைக்கதை விவாதத்தில் இருப்பதுபோல் குறிப்பிட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா வெளியீட்டிற்குப் பின் துவங்கலாம் எனத் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.